துஆ (الدعاء) என்பது ஒரு முஸ்லிமின் வாழ்கையில் அல்லாஹ் ஏற்படுத்தியது மிக முக்கியமான வணக்க வழிபாடாகும்.மனிதன் தவறுகள் பிழைகள் செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான்.
இறைவன் மனிதத்தவறுகளை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களை பாவத்தில் இருந்து நேர்வழிப்படுத்த விரும்புகின்றான்.
குர்ஆனில் இறைவன் இதனைப்பற்றி மிகவும் தெளிவாக விவரித்து கூறுகின்றான் “நபியே என்னைப்பற்றி உம்மிடத்தில் எனது அடியார்களுக்கு கேட்டால் அவர்களிடத்தில் கூறுங்கள் என்னை அழைப்பவர்களின் அழைப்புகளை நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கின்றேன் என்று கூறுவீராக என்று இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழி காட்டினான்”
இந்நிலையில் ஒரு அடியான் இறைவனிடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரார்த்தனைகள் செய்கின்றான் அதில் இறைவன் ஓரு சில இடங்களில் ஒரு அடியானுடைய பிரார்த்தனைகளை மிக சீக்கிரம் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.
அதில் மிக முக்கியமான இடங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
1- கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைக்கு பின் (بعد الصلوات خمس)
ஒரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஐவேளைத் தொழுகையை பிற்பாடு கேட்கப்படுகின்ற துஆ இறைவனிடத்தில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இடங்களில் ஒன்றாகும்.
2- லைலத்துல் கதர் (ليلة القدر)
ரமலான் மாதத்தில் இறுதிப்பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் வருகின்ற இந்த இரவு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொன்ட இரவாகும்.
இந்த இரவில் அடியான் செய்கின்ற துவாக்கள் அதிகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
3- இரவின் இருதிப்பகுதி (في الأخير الليل)
4- இக்காமத் அதானுக்கிடையில்
5- இறைவனின் பாதையில் போர் செய்கின்ற பொழுது.
6-மழை பெய்யும் பொழுது.
7- ஜும்மாவுடைய நாளில்
(நேரம் குறிப்பிடப்படாத நேரத்தில்.)