
போதைப் பொருட்கள் இன்று சமூகத்தின் மிகப்பெரும் எதிரியாக காணப்படுகின்றது.
போதை வஸ்து என்பது சர்வ சாதாரணமாக நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்றாகவும் அது இன்றைய சமுதாயத்தினர்களை குறிப்பாக இளைஞர்களை மிகவும் அடிக்டானவர்களாக மாறுகின்ற சம்பவங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.

போதை பொருட்கள் தொடர்பான முன் எச்சரிக்கைகளை நாம் நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.இன்று சோசியல் மீடியாக்களில் மிகவும் பரவலாக பகிரப்படுகின்ற ஒரு புகைப்படம் தான் நீங்கள் மேலே காண்கின்ற இந்த புகைப்படம் இந்த புகைப்படம் போதை பொருட்கள் எவ்வாறு உருமாறி விதவிதமான உருவங்களில் நமது சமுதாயத்தில் ஊடுருவில் உள்ளது என்பதனை மிகவும் தெளிவாக நம்மலால் அவதானிக்க முடிகின்றது.
சிறார்கள் அன்றாடம் உண்ணுகின்ற மிட்டாய்கள் போன்ற வடிவத்தில் காணப்படுகின்ற இந்நு போதை வஸ்தாகும்இவ்வாறான போதைவஸ்துகளை விட்டும் எமது பிள்ளைகளையும் எமது சமுதாயத்தினறை பாதுகாப்போம்