தாயிப் நகரில் பார்க்கவேண்டிய இஸ்லாமிய இடங்கள் Islamic Places In Taif to visit All Muslims

தாயிப் நகரம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது அழகிய நகரம் ஆகும். சவுதி அரேபியாவின் ஏழாவது மிக பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது இன் நகரம் இயற்கை எழில், இதமான காலநிலை, பழங்கள் உற்பத்தி குறிப்பாக மாதுளை, வாசனைத்திரவ உற்பத்தி, இஸ்லாமிய வரலாற்று இடங்கள், என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அழகிய நகரம் ஆகும்.

அல்-குர்ஆனில் இன் நகரத்தைப்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற, பழமையான சந்தை (sooq ukkaal) (سوق عكاظ) அமைந்துள்ளது நகரமும் இன் நகரம்தான். நபி (ஸல்) அவர்கள் இங்கு இரு தடவைகள் வருகை தந்துள்ளார்கள் நபி (ஸல்) அவர்களுடன் இன் நகரம் மிகவும் பினக்கமான உறவை கொண்டுள்ளது.

உலகின் பல பாகங்களில் இருந்து வரும் ஹஜ், உம்ரா யாத்திரிகர்கள் இன் நகரத்தை பார்வையிடுவதும் இதன் வரலாறுகளை அறிந்துகொள்வதையும் ஆர்வம் காட்டுவது இங்கு மிகவும் இயல்பான விடையமாகும்.

அவ்வாறு நாம் இன் நகரத்தில் இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவதுடன் கூடிய நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் என்ன? என்பதை பற்றி இத்தொடரில் பார்போம்.

1- மஸ்ஜிதுல் அப்பாஸ் (مسجد العبّاس)

Location click here

தாயிப் நகரத்தின் மிகவும் பேசப்படுகின்ற மிகவும் பழமையான வரலாற்றை கொண்டு ஒரு பள்ளிவாசல் ஆகும். ஹிஜ்ரி 592 கட்டுமானப்பணி முடிவடைந்து பாவனைக்கு வந்தது.

இந்த பள்ளிவாயலின் அருகாமையில் அப்துல்லா இப்னு அப்பாஸ் (عبدالله بن عبّاس) (ரழி) அவர்களின் ஐனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே இப் பள்ளிவாசல் அப்துல்லா இப்னு அப்பாஸ் என பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது.

2- மஸ்ஜிதுல் அத்டாஸ் (مسجد عداس)

Location click here

தாயிப் நகரத்தின் அமைந்துள்ள மிக பழமையானதும் நபி (ஸல்) அவர்களுடன் நேரடி வரலாற்றை கொண்டுள்ளது. இம் மஸ்ஜித் மஸ்ஜிதுல் அத்தாஸ் (مسجد عداس என பெயர் சூட்ட மிக முக்கிய வரலாறு ஒன்று உள்ளது.”நபி (ஸல்) அவர்கள் தாயிப் நகரம் வந்தார்கள் இப்பயனத்தின் நோக்கம் மக்காவில் ஏற்பட்ட புறக்கணிப்பும் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்பில் ஏற்ப்பட்ட மறுப்பும் இன் நகருக்கு அழைத்து வந்து.

நபி அவர்கள் இன் நகர மக்கள் அன்பானவர்கள் தாய் வழி உறவுகள் உள்ள நகரம் என்று பல நல்லெண்ணத்துடன் இன் நகருக்கு வந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணம் சுக்குநூறாக உடையும்படி இம்மக்கள் நடந்து கொண்டார்கள்.நபி அவர்களை மிக மோசமா நடத்தினார்கள் கற்களால் அவர்களை அடித்து கேலி கிண்டல்கள் செய்து மிகவும் கடுமையான கஷ்டங்களை கெடுத்து இம் மக்கள் நபி ஸல்லல்லாஹு அவர்களை துன்புறுத்தினார்கள்.இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாத நிலையில் திராட்சை தோட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்தார்கள்.

அத் தோட்டம் இஸ்லாத்தின் விரோதியான உத்துபாவினுடைய தோட்டமாக இருந்து இத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு உத்துபா அவனது அடிமைக்கு கட்டளையிட்டான்.அந்த அடிமையின் பெயர்தான் அத்டாஸ் (عداس) அவர் நபி ஸல் அவர்களை அத் தோட்டத்தில் இருந்து வெளியேற்ற சென்ற பொழுது நபி ஸல் அவர்கள் இவர் யார் என்தை தனது மனதில் அறிந்து கொண்டார்கள். தன்னை வெளியேற்று வந்தவரிடம் நீங்கள் நீனவா முதாயத்தைச் சேர்ந்தவரா என்று நபி ஸல் அவர்கள் வினவினார்கள் அவ்வேளை அவர் ஆம் என்று பதில் அளித்தார்.

மீண்டும் நபி ஸல் அவர்கள் சகேதரர் யூனுஸ் அவர்களை தெரியுமா? என வினவினார்கள் அதற்கு அவர் ஆம் அவரை நன்றாக தெரியும் உங்களுக்கு அவரை எப்படி தெரியும் என்று அத்டாஸ் (عداس) நபி அவர்களிடத்தில் கேட்டார் அதற்கு நபி அவர்கள் அவரும் தூதர் நானும் அவரை போன்று ஒரு தூதர்தான் என்று பதில் அளித்தார்கள். பின்னர் அத்டாஸ் (عداس) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இதன் காரணமாகவே அவரின் பெயரில் அவ்விடத்தில் அந்த பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

3- மஸ்ஜிதுல் கூஃஉ مسجد الكوع

Location click here

இப் பள்ளிவாசல் அத்டாஸ் (عداس) பள்ளிவாசல் அருகாமையில் உள்ளது இந்த இடத்தில் நபி அவர்கள் முதல் தடவை தாயிப் நகரம் வந்த நேரத்தில் இப்பள்ளிவாயல் இடத்தில் அமர்ந்து | சாய்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இப்பள்ளிவாயல் மஸ்ஜிதுல் கூஃஉ (مسجد الكوع )என அழைக்கப்படுகிறது.

4- மஸ்ஜிதுல் குப்ஷா (مسجد الخبز)

Location click here

தாயிப் நகரத்தில் நாம் பார்வையிட வேண்டிய மிக முக்கியமான பள்ளிவாசல்கள் இதுவும் ஒன்று இப்பள்ளிவாசல் அத்டாஸ் مسجد) عداس) பள்ளிவாசலுக்கும் (مسجد الكوع) பள்ளிவாசலுக்கு இடையில் உள்ள பள்ளிவாசலாகும்.

5- இக்ரிமா அணைக்கட்டு (سد عكرمة)

Location click here

தாயிப் நகரத்தில் உள்ள இந்த அணைக்கட்டு நபி அவர்களுடைய காலத்தில் ஹஜ் செய்பவர்களுக்கு தண்ணியை சேகரித்து வழங்கும் ஒரு அணைக்கட்டாக இந்த அணைக்கட்டு நபி அவர்களுடைய காலத்தில் இருந்து வந்துள்ளது.


Leave a Reply